திரிஷ்யம்-2 ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரேயா!
ADDED : 1101 days ago
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்- மீனா நடித்து வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கானே தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். அபிஷேக் பதாக் இயக்கி உள்ள இப்படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க, பெண் போலீஸ் வேடத்தில் தபு நடித்துள்ளார். தற்போது திருஷ்யம்-2 ஹிந்தி ரீமேக் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படம் நவம்பர் 18ல் திரைக்கு வருகிறது. மேலும் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.