துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அன்ஷு மாலிகா அறிமுகமாகிறாரா? ஆர்.கே.செல்வமணி பதில்
ADDED : 1099 days ago
இயக்குனர் ஆர். கே .செல்வமணி, நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்ஷு மாலிகா. இவர் ஆதித்ய வர்மா, மகான் படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் நடிக்க இருக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அது குறித்து இயக்குனர் ஆர் .கே .செல்வமணி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய மகள் அன்ஷு மாலிகா மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்று இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் அங்கு தான் இருப்பார். அதனால் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. அதன் பிறகு வேண்டுமானால் ஒருவேளை அவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆர்.கே. செல்வமணி.