உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஹீரோயின் ஆன அஞ்சனா கீர்த்தி

மீண்டும் ஹீரோயின் ஆன அஞ்சனா கீர்த்தி

அழகியபாண்டிபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சனா கீர்த்தி. 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்களில்தான் ஹீரோயினாக நடித்தார். கடைசியாக அவர் ஹீரோயினாக நடித்தது ஜம்புலிங்கம் 3டி என்ற படத்தில் தற்போது அறம் செய் என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் லொள்ளுசபா ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மீனாட்சி மேகாளி, நித்யா ராஜ், பாய்ஸ் ராஜன், திலீபன், நான் கடவுள் தீனதயாளன், ரஞ்சன் குமார், யோகிராம், சோனா, அஞ்சலிதேவி உள்பட பலர் நடிக்கிறார்கள். தாரகி சினிமா தயாரிக்கிறது. பாலு எஸ்.வைத்தியநாதன் இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !