உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மர்ம தேசம்' தொடர் புகழ் லோகேஷ் தற்கொலை

‛மர்ம தேசம்' தொடர் புகழ் லோகேஷ் தற்கொலை

மர்ம தேசம் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மர்ம தேசம் ஜீ பூம்பா போன்ற வெற்றி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் லோகேஷ் ராஜேந்திரன். படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த அவர் குறும்படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் கடந்த அக்.,2ல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர். பரிசோதனையில் அவர் விஷம் அருந்தியது தெரியவந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி உடன் விவாகரத்து உள்ளிட்ட குடும்ப பிரச்னையால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த லோகேஷ் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !