புதிய படங்களை நயன்தாரா தவிர்ப்பது ஏன்?
ADDED : 1142 days ago
சிரஞ்சீவியுடன் நடித்த காட்பாதர் படம் திரைக்கு வந்துள்ளதை அடுத்து ஷாருக்கானுடன் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் நயன்தாரா. இதன் பிறகு அவரை தேடி சில பட வாய்ப்புகள் சென்றபோது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் தற்போது கமிட்டாகி உள்ள இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டு குழந்தை பெற்றுக்கொள்ள நயன்தாரா முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இப்போதைக்கு புதிய படங்களை ஏற்பதில்லை என்று நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாகவும், அதே சமயம் ரவுடி பிக்சர் மூலம் தொடர்ந்து படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் குழந்தை பிறப்புக்கு பிறகு தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.