உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் படத்தில் இணைந்த மிர்னா

ஜெயிலர் படத்தில் இணைந்த மிர்னா

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ரஜினி நடித்து வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் கசிந்து வருவதை அடுத்து பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, தமன்னா உள்பட பல நடித்து வரும் நிலையில் தற்போது மிர்னா மேனன் என்ற மலையாள நடிகையும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மிர்னா என்ற பெயரில் தமிழில் புர்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருந்த வேடத்தில் மிர்னா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !