உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ்

‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ்


நடிகர் பிரித்விராஜ் கடந்த வருடம் டைரக்ஷன், நடிப்பு என பிசியாக இருந்தார். ஆனால் அவரை தேடி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இருந்தும் பட வாய்ப்புகள் நிறைய வருவதால் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ‛வாரணாசி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் ‛ஐ நோபடி' மற்றும் ‛கலிபா' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்,

இதில் ‛ஐ நோபடி' படத்தை ‛ரோஷாக்' பட புகழ் இயக்குனர் நிசாம் பஷீர் என்பவர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தயாரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !