உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத்

‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத்


மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான ‛திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்களும், குறிப்பாக இரண்டு பாகங்களின் கிளைமாக்ஸ்களும் ரசிகர்கள் யூகிக்க முடியாத விதமாக வித்தியாசமான முறையில் கொடுத்திருந்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்த மூன்றாம் பாகத்துடன் இந்த படம் முடிவடைகிறது என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.

அதனால் இந்த படம் எப்படி வந்திருக்கும், இதன் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆளாளுக்கு தங்கள் கற்பனையை தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு பாகங்களிலும் கீதா பிரபாகர் என்கிற போலிஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆஷா சரத், இந்த மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படம் குறித்து அவர் கூறும்போது, ‛‛முதல் இரண்டு பாகங்களைப் போலவே இந்த மூன்றாம் பாகத்திலும் கிளைமாக்ஸ் எதிர்பாராத விதமாக இருக்கும். ஆம்.. இன்னும் நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டி இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !