உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸான சுவடே தெரியாமல் ஓடிடிக்கு வந்த நட்சத்திர குடும்ப வாரிசுகள் படம்

ரிலீஸான சுவடே தெரியாமல் ஓடிடிக்கு வந்த நட்சத்திர குடும்ப வாரிசுகள் படம்

நடிகர் மகேஷ்பாபுவின் குடும்பத்திலிருந்து, அவரது சகோதரி மகன் ஜெயகிருஷ்ணா கட்டமனேனி சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'ஸ்ரீனிவாச மங்காபுரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் மகன் ராஷா தால்தானி தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். அஜய் பூபதி இயக்கிய இந்தப் படம், கடந்த ஜூலை 29 அன்று திரையரங்குகளில் வெளியானது.

வாரிசு நடிகர்கள் இருவருக்கும் இந்தப் படம் திரையுலகில் வரவேற்பு கம்பளம் விரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறி, வந்த சுவடே தெரியாமல் திரையரங்கை விட்டு அகன்றது. படம் வெளியாகி இருபது நாட்களே ஆன நிலையில், இன்று முதல் (ஆகஸ்ட் 20) இப்படம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. நட்சத்திர குடும்பத்து வாரிசுகள் இருவருக்கும் இப்படி முதல் படம் தோல்வியாக அமைந்ததால், இரு குடும்பத்தினருமே அப்சட்டாக இருக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !