செப் தாமு உடல் தகனம் : கண்ணீருடன் பிரியாவிடை அளித்த பிரபலங்கள், ரசிகர்கள்
பிரபல சமையல் கலைஞர், செப் தாமு (72) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று(அக்., 25) காலமானார். தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட தாமு, சமையல் கலையில் கைதேர்ந்தவர். இந்தியா முழுக்க பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார். 2010ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 2004-ல் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றார். பத்மஸ்ரீ விருதும் வென்றுள்ளார்.
செப் தாமுவின் உடல் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அமைச்சர் ராஜ்மோகன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சின்னத்திரையை சேர்ந்த குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத், தீனா, மணிமேகலை, கேபிஒய் பாலா, நிஷா, குரேஷி, ஷகீலா, மாதம்பட்டி ரங்கராஜ், கவுசிக்(செப்), பட்(செப்) உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று(செப்., 26) அவரது உடல் கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலியில் மாதம்பட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.