டிவியில் நாளை ஜோதி ஒளிபரப்பாகிறது
ADDED : 1188 days ago
வெற்றி மற்றும் ஷீலா ராஜ்குமார் முக்கிய வேடங்களில் நடித்திருந்த படம் ஜோதி. ஏ.வி.கிருஷ்ணா பரமாத்மா இயக்கியுள்ள இப்படத்தில் கிரிஷா குருப், நடிகர் மைம் கோபி மற்றும் நடிகர் இளங்கோ குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர். கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளை திருடும் கொடூர மனம் கொண்ட கும்பலை பற்றிய படம். இதில் ஷீலா ராஜ்குமார் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பறிகொடுத்த தாயாக நடித்திருந்தார். வெற்றி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சஸ்பென்ஸ் தரில்லர் வகை படமாக இது உருவாகி இருந்தது. கடந்த ஜூலை மாதம் தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்தப் படம் நாளை (16ம் தேதி) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.