போலீஸ் விசாரணையில் டிவி நடிகர் அர்ணவ்
ADDED : 1089 days ago
சென்னை : 'டிவி' தொடர்களில் நடிப்பவர் அர்ணவ்(33). 'டிவி' நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பிணியான தன்னை, அர்ணவ் தாக்கியதாக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். அர்ணவும், திவ்யா மீது புகார் அளித்தார். விசாரணைக்காக, நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு, அர்ணவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. பூந்தமல்லியை அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பில் அர்ணவ் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் அவரை மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.