உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவுரி கிஷன் கதாநாயகியாக நடிக்கும் லிட்டில் மிஸ் ராவுத்தர்

கவுரி கிஷன் கதாநாயகியாக நடிக்கும் லிட்டில் மிஸ் ராவுத்தர்

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். இந்த ஒரே படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார். அதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்கான 96 படத்தில் தனது கேரக்டரில் மீண்டும் தானே நடித்தார். இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள லிட்டில் மிஸ் ராவுத்தர் என்கிற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக நடித்துள்ளார் கவுரி கிஷன்.

இந்த படத்தை விஷ்ணு தேவ் என்பவர் இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. மியூசிக்கல் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கவுரி கிஷன் நடித்த அதே 96 படத்தின் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !