உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு…

ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று முதல் விஜய் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது 'சிக்மா' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தின் ஆரம்பம், பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு, தலைப்பு அறிவிப்பு, டீசர் வெளியீடு என எதற்குமே விஜய் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு கூட போடவில்லை என்பது ஏற்கெனவே செய்திகளாக வந்தது. தற்போதும் அது பற்றி அதிகமாகப் பேசி வருகிறார்கள்.

தாத்தா ஒரு திரைப்பட இயக்குனர், பாட்டி ஒரு தயாரிப்பாளர், பாடகி, இயக்குனர் என சினிமாவில் பெயர் வாங்கியவர்கள். அவர்கள் கூட பேரன் சஞ்சய் படத்திற்காக இதுவரை எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, இந்தப் படம் ஆரம்பம் பற்றி திரையுலகில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. சங்கீதாவின் அப்பா சொர்ணலிங்கம் இங்கிலாந்து நாட்டில் பிஸினஸ்மேன் ஆக இருப்பவர். அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன். அவர்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குக் குடி பெயர்ந்தவர்கள். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக அறிமுகப்படுத்தி லைகா நிறுவனம் 'சிக்மா' படத்தை ஆரம்பித்ததாம்.

லைகா நிறுவனம் தமிழில் முதன் முதலில் தயாரித்த படம் விஜய் நடித்த 'கத்தி'. அப்படத்திற்குப் பின்புதான் விஜய்யின் சம்பளம் அதிகமாக உயர்ந்தது.

'சிக்மா' படம் வெளிவரும் போது அந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் மற்ற நடிகர்களின் படங்களைச் செய்வது போல, 'டிரோல்' செய்ய முன் வர மாட்டார்கள் என்று நம்புவோமாக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

முருகன்
2026-03-01 08:52:15

........ கூட்டம் எது வேண்டுமானாலும் செய்யும்


Senthoora, Sydney
2026-03-01 07:18:35

இங்கே கவனிக்கவேண்டியது, விஜய்யின் பெயரையோ, s a சந்திரசேகர் பெயரையோ இவர் பயன்படுத்தவில்லை. மானஸ்தன்.