அடுத்தாண்டு தீபாவளிக்கு சல்மான் கானின் ‛டைகர் 3' ரிலீஸ்
ADDED : 1086 days ago
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2012ம் ஆண்டு 'ஏக் தா டைகர்' என்ற படமும், 2017ம் ஆண்டு 'டைகர் ஜிந்தா ஹை' படமும் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. இதன் அடுத்த பாகம் ‛டைகர் 3' என்ற பெயரில் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. இதே நிறுவனம் தயாரிக்கும் ‛டைகர் 3' படத்தில் சல்மான் கான், கத்ரினா கைப் நடிக்கின்றனர். மனீஷ் ஷர்மா இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தாண்டு ஏப்.,21ல் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.