உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார் சித்தாரா

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார் சித்தாரா

1989ம் ஆண்டு வெளியான புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சித்தாரா. அதன்பிறகு புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இருவாசல், பாட்டொன்று கேட்டேன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சினத்திரை பக்கம் வந்தார். கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, கவரிமான்கள், பராசக்தி, உள்பட சில சீரியல்களில் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார்.

அதன்பிறகு தற்போது இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ஹிட்லிஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

விக்ரமன் மற்றுமு் கே.எஸ்.ரவிகுமாரின் ஆஸ்தான நடிகையாய் இருந்த சித்தாரா தற்போது கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் விக்ரமனின் மகன் நடிக்கும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !