டி.வி நடிகை தூக்கிட்டு தற்கொலை
ஹிந்தி சின்னத்திரையுலகில் பிரபலமானவர் வைஷாலி தாக்கர். 'சசுரால் சிமர் கா' என்ற தொடரில் அஞ்சலி பரத்வாஜ் ஆகவும், 'சூப்பர் சிஸ்டர்'சில் ஷிவானி சர்மா ஆகவும், 'மன்மோகினி 2' வி-ல் அனன்யா மிஷ்ரா ஆகவும் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக ரக்ஷாபந்தன் படத்திலும் நடித்திருக்கிறார்.
வைசாலிக்கு கடந்த ஆண்டு கென்யாவைச் சேர்ந்த டாக்டர் அபிநந்தன் சிங் என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் திருமணத்தை நடத்துவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விட்டதாக அறிவித்தார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் அபிநந்தனுடன் நடந்த நிச்சயதார்த்த படங்கள், வீடியோக்களை நீக்கிறார்.
கடும் மன அழுத்த்தில் இருந்த அவர் கடந்த ஓராண்டாக மும்பையை காலி செய்துவிட்டு இந்தூரில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வைஷாலி தனது வீட்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து தற்கொலை செய்த அறையை சோதித்து பார்த்தபோது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து வைசாலி குறிப்பிட்டுள்ளார். அதில் தனது முன்னாள் காதலனின் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டுள்ளது, என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.