மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்
ADDED : 1193 days ago
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கர்ணன் படத்துக்குப்பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார் மாரி செல்வராஜ். அப்போது திடீரென்று உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க திட்டமிடப்பட்டதால் துருவ் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் அடுத்தப்படியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.