சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் சூரி
ADDED : 1078 days ago
தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் நடித்து வரும் சூரி, இதையடுத்தும் ஒரு படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கப் போகிறார். மேலும் தான் காமெடியனாக நடித்தபோது சிவகார்த்திகேயனுடன் இணைந்து எட்டு படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து நாளை திரைக்கு வரும் பிரின்ஸ் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் சூரி நடித்திருக்கிறார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திலும் கெஸ்ட் ரோலில்தான் சூரி நடித்திருந்தார். அதன் பிறகு பசங்க- 2, முப்பரிமாணம், தொண்டன் என சில படங்களில் கெஸ்ட் ரோலிங் நடித்த சூரி, தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் கெஸ்ட் நடித்திருக்கிறார். இப்படத்தின் கிளைமாக்ஸில் சூரி நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.