உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 9 லட்சத்துக்கு கம்மல் வாங்கிய சின்னத்திரை நடிகை

9 லட்சத்துக்கு கம்மல் வாங்கிய சின்னத்திரை நடிகை

சின்னத்திரை நடிகர், நடிகைகள் சினிமா நடிகர்களை விடவும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்று வருகின்றனர். அதற்கேற்றார் போல் அவர்களது பொருளாதார வாழ்வாதாரமும் உயர்ந்து வருகிறது. ஒரு ப்ராஜெக்ட் கமிட்டானாலே சொகுசு காரில் வலம் வரத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான ஹேமா ரூ.9 லட்சத்திற்கு வைர கம்மலை வாங்கி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர். சீரியலில் நடிப்பதற்கு ஒருநாளைக்கு இவ்வளவு என்ற கணக்கில் கணிசமான தொகையையும் சம்பளமாக பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !