விஷால் - அபிநயா காதல் வெறும் வதந்தி
ADDED : 1072 days ago
45 வயதை தாண்டிவிட்ட விஷாலின் வாழ்க்கையில் சில காதல்கள் வந்து போனது. ஒரு நிச்சயதார்த்தமே நின்று போனது. தற்போது நடிகர் சங்கத் தலைராக இருக்கும் அவர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதில் பிசியாக இருக்கிறார். ஹிட் படங்களை கொடுத்து இருக்கிற கடனை அடைப்பதில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை அபிநயாவை, விஷால் காதலிப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் என்றும் வதந்திகள் ரெக்க கட்டி பறந்தது. ஆனால் இது உண்மையில்லை. மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடிக்கிறார் அபிநயா, இதற்காக ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அந்த படங்கள் எப்படியோ லீக் ஆகியிருக்கிறது. அதை வைத்து இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டுவிட்டார்கள் என்று அபிநயா தரப்பில் மறுத்திருக்கிறார்கள்.