இளம் இசையமைப்பாளர் மரணம்
ADDED : 1119 days ago
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ரகுராம் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். சென்னை, வட பழனியை சேர்ந்தவர் இசையமைப்பாளர் ரகுராம். 2017ல் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் விதார்த் நடித்த, ‛ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ஓரிரு படங்களுக்கு இசையமைத்தார். ஆல்பம் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். சத்திய சோதனை என்ற படத்திற்கு இசையமைத்து வந்தார். சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உடல்நல பிரச்னையால் சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று(அக்., 29) காலை உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.