இசையமைப்பாளர் இமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
ADDED : 1108 days ago
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவர் டி. இமான். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்திற்கு இசையமைத்து மாநில அரசின் விருது பெற்ற இவர், அதன்பிறகு அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து தேசிய விருது பெற்றார் .
இந்தநிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, கேப்டன் உள்ளிட்ட பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இமானுக்கு இசைத்துறையில் செய்து வரும் சாதனைக்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் மற்றும் சான்றிதழை வெளியிட்டுள்ள இமான், ‛அனைவரின் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.