காஜல் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கோஸ்டி டீசர் வெளியீடு
ADDED : 1108 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் நடித்து முடித்திருந்த கோஸ்டி என்ற ஹாரர் காமெடி படம் தற்போது திரைக்கு வருவதற்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால் போலீஸ், நடிகை என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கல்யாண் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.