விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி மாற்றம்
ADDED : 1068 days ago
விக்ரம், மாமனிதன் படங்களைத் தொடர்ந்து, வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார், ஜவான், காந்தி டாக்ஸ் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதில் அந்தாதூண் படத்தை இயக்கிய ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் கைத்ரீனா கைப்புடன் இணைந்து விஜய் சேதுபதியின் நடித்துள்ள படம் மெர்ரி கிறிஸ்மஸ். இந்த படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 23ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடிய தாமதம் ஆவதால் இந்த படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது .