பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ரம்பா
ADDED : 1070 days ago
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து திரும்ப அழைத்து வரும் போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் காரின் முன் பக்கம் சேதமடைந்தது. ரம்பா அவரது குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மகள் சாஷா மருத்துவமனையில் இருப்பதாக ரம்பா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தாங்கள் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ராம்பா. மேலும் நான் ரொம்ப கொடுத்து வச்சவ எல்லாரும் எனக்காக பிராத்தனை செய்றீங்க. எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை என்றும் நெகிழ்ச்சி உடன் கூறியுள்ளார்.