மீண்டும் மனைவியுடன் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ்
ADDED : 1074 days ago
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இணைந்து பாடும்போதுதான் காதல் ஏற்பட்டு திருமணம் செய்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்து பாடி உள்ளனர். அதுவும் இன்னொரு இசை அமைப்பாளரின் இசையில்.
காம்ப்ளக்ஸ் என்ற படத்தில் இடம் பெறும் “கத்தி கூவுது காதல்ஞ்” என்ற பாடலை பாடி உள்ளனர். கார்த்திக் ராஜாவின் இசையில் உருவாகிய இந்த பாடலை ஞானகரவேல் என்பவர் எழுதியுள்ளார். இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார்.