பாடகி ஆனார் மானஸ்வி
ADDED : 1074 days ago
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. ஷாலினி, ஷாம்லிக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறவர். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு தர்பார், எனிமி, சித்திரை செவ்வானம், மாமனிதன், மகா, பட்டாம்பூச்சி, தி லெஜண்ட், கண்மணி பாப்பா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது பத்துதல, ஒன் டூ ஒன், கும்கி 2 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மானஸ்வி பாடகி ஆகியிருக்கிறார். கழுமரம் என்ற படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார். ரோஷன் மாத்யூ இசையில் பாடகர் வி.எம்.மகாலிங்கத்துடன் இணைந்து பாடி உள்ளார். இந்த படத்தை இயக்குகிறவர் மானஸ்வியின் தந்தை கொட்டாச்சி.