சர்வம் தாளமயம் ஒளிபரப்பாகிறது
ADDED : 1108 days ago
சில நல்ல படங்கள் மக்களின் கவனத்தை பெறாமலேயே கடந்து சென்று விடும். அப்படியான படங்களில் ஒன்று சர்வம் தாளமயம். சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மிகப்பெரிய மிருதங்க ஜாம்பவானிடம் இசை கற்று எப்படி அதில் பெரிய இடத்தை பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
இசைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்ட படம். ஏ.ஆர்.ரகுமானின் இசை, ரவி யாதவின் ஒளிப்பதிவு, ராஜீவ் மேனனின் இயக்கம், நெடுமுடி வேணு எனும் மகா கலைஞன் என பெரிய கூட்டணி இருந்தும் படம் கவனம் பெறாமல் போய்விட்டது.
ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, வினீத், குமரவேல் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 2019ம் ஆண்டு வெளியான இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் காணக் கிடைத்தாலும், முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நாளை மாலை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.