கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கிய பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்
ADDED : 1070 days ago
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தயாரித்த லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. இன்று மாலை இயக்குனர் மணிரத்னமும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரனும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அலுவலகத்துக்கு நேரில் சென்று அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கல்கி ராஜேந்திரன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு மனிரத்தினம் மற்றும் சுபாஷ்கரன் இருவரும் ரூ.1 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கினர்.