உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர் திடீர் சந்திப்பு!

கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர் திடீர் சந்திப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பரவலாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நடித்த வாசி படத்தை அடுத்து தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் ஸ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை சந்தித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அவர்களின் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூர் அடுத்தபடியாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தில் அறிமுகமாவதாகவும் டோலிவுட் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !