குடும்பத்தினர் உடன் கமல் : வைரலான போட்டோஸ்
ADDED : 1067 days ago
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகினர்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். முன்னதாக நேற்று அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் 234வது படத்தின் அறிவிப்பும் வெளியானது. இதில் 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கமல், மணிரத்னம், உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதனிடையே கமல்ஹாசன் தனது குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட்டு பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், சுஹாசினி, அனுஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.