நகை கடை கொள்ளையை படமாக்கும் பெண் இயக்குனர்
ADDED : 1091 days ago
மேட்னி பிளோக்ஸ் நிறுவனம் சார்பில் பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் படம் ஆதாரம். அறிமுக இயக்குனர் கவிதா இயக்குகிறார். புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கவிதா கூறியதாவது: நம் கண் பார்க்கும் விசயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பார்த்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது. இந்த கருவை மையமாக கொண்டு நகை கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகி வருகிறது. என்றார்.