திரி விக்ரம் படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மகேஷ் பாபு
ADDED : 1061 days ago
சர்காரு வாரி பாட்டா படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் தனது 28வது படத்தில் நடிக்கப் போகிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் தொடங்க உள்ளது. இந்த படம் ஆக்சன் கதையில் உருவாக இருப்பதால் தனது உடல் கட்டை கட்டுக்கோப்பாக மாற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார் மகேஷ் பாபு. அதன் காரணமாக பிட்னஸ் டிரையினர் உதவியுடன் தனது வீட்டில் அமைந்துள்ள ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . அது குறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். திரிவிக்ரம் இயக்கும் படத்தை சில மாதங்களில் முடித்துவிட்டு அடுத்தபடியாக ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு தயாராக போகிறார் மகேஷ் பாபு.