ஹிந்தி வெப்சீரிஸில் கவுதமி
ADDED : 1062 days ago
தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. ரஜினிகாந்த் - பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கமல், பிரபு, சத்யராஜ் , விஜயகாந்த், ராமராஜன் என முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்ட் வந்த கவுதமி, 2015ம் ஆண்டு கமலுடன் பாபநாசம் படத்தில் இணைந்து நடித்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தவர், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைந்து கொண்டு அரசியல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் சீரிஸ் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார் கவுதமி. மும்பையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் கவுதமி.