தமிழுக்கு வரும் மற்றுமொரு வெளிநாட்டு நடிகை
ADDED : 1055 days ago
தமிழில் தற்போது லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன், கனடாவை சேர்ந்த சன்னி லியோன் நடித்து வருகிறார்கள். ஸ்வீடனை சேர்ந்த மரியா, பிரின்ஸ் படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது பிரான்சை சேர்ந்த மனிஸா தைத் நடிக்க வந்திருக்கிறார்.
லைட்மேன் மற்றும் உனக்குள் நான் படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்கும் புதிய படம் 'ஏ ஹோம் அவே பிரம் ஹோம்' என்ற படத்தில்தான் மனிஸா தைத் நடிக்கிறார். அவருடன் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடிக்கிறார்கள். உமா பானு, சாரா ஆசியா தயாரிக்கிறார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.