பாலிவுட் நடிகர் சித்தாந்த் திடீர் மரணம்: உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு
ADDED : 1055 days ago
பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி. வாரிஸ், சூர்யபுத்ர கரண் அவர் நடித்த பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள். 46 வயதே ஆன சித்தாந்த் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணம் அடைந்துள்ளார். சித்தாந்துக்கு அலிசியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரின் மறைவு பாலிவுட் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திரைப்பட நடிகர்கள் இடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகமாகி உள்ளது. இதற்காக அவர்கள் அளவிற்கு அதிகமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதுவே மரணத்திற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரும் இதுபோன்ற கடும் உடற்பயிற்சியால்தான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.