உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணம் எப்போது? வெட்கப்பட்டு நழுவிய சாய் தன்ஷிகா

திருமணம் எப்போது? வெட்கப்பட்டு நழுவிய சாய் தன்ஷிகா


கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா, சாயாஜி ஷிண்டே, கபிர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யோகிடா'. பிப்.6ல் ரிலீசாகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சாய் தன் ஷிகா பேசியதாவது: ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க கடுமையாக உழைத்தேன் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. பேசுவதை குறைத்து செயலில் காண்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை அதிகம் பார்க்க முடிகிறது. மானபங்கம் செய்துவிட்டால் ஒரு பெண்ணை செயல்படவிடாமல் தடுத்துவிடலாம் என நினைப்பார்கள். ஆனால் அதை கடந்தும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. வாழ்வில் என்ன நடந்தாலும் அதில் இருந்து தைரியமாக மீண்டும் வர வேண்டும். 'கபாலி' பட கெட்அப்பில் இதில் நடிக்கிறேன். ரஜினிகாந்த் நடித்த அந்த படத்தில் யோகி என்ற என் கேரக்டர், அந்த கெட்அப் பெரிதும் பேசப்பட்டது.

மலேசியாவில் அந்த மாதிரி பல பெண்கள் ஹேர் கட் செய்தார்கள். அது எனக்கு ஆச்சரியம் அளித்தது. 'பேராண்மை' பட காலத்தில் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை பயிற்சி கற்று கொண்டேன். அது ஒழுக்கத்தை கடை பிடிக்க வைத்தது. இன்றும் பலன் கொடுக்கிறது. இவ்வாறு பேசினார்.

தன்ஷிகாவிடம் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்க, வெட்கப்பட்டு நழுவினார். நடிகர் விஷால் உடன் திருமணம் செய்ய இருப்பதாகவும், நடிகர் சங்க கட்டடம் முடிந்த பிறகு அங்கே தான் தங்கள் திருமணம் நடக்கும் என கடந்தாண்டே அறிவித்த நிலையில், இன்னும் நடிகர் சங்க கட்டடம் முடியாததால் திருமணம் தள்ளி போவதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Premanathan S, Cuddalore
2026-02-01 20:58:12

நித்ய கல்யாணப் பெருமாளுக்கு இன்னும் ஒரு கல்யாணம் தேவையில்லை