விடுதலை படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1056 days ago
வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 020ம் ஆண்டு தொடங்கியது. படம் இரண்டு பாகமாக தயாராவதால் இதன் படப்பிடிப்பு 150 நாட்களுக்கும் மேலாக நடந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆசிரியராகவும், சூரி கான்ஸ்டபிளாகவும் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகம் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்ட் புரொக்ஷன் பணிகளை உதவியாளர்கள் செய்கிறார்கள். அதனை வெற்றிமாறன் கண்காணிக்கிறார். இதனால் தற்போது சூர்யாவுடன் இணையும் வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் வெற்றிமாறன்.