ராகுல் யாத்திரையில் பங்கேற்ற நடிகை ரியாசென்
ADDED : 1055 days ago
காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி, பாரத் ஜூடோ என்ற நடை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடை பயணம் செய்தவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது நடை பயணத்தை தொடருகிறார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பாதுர் என்ற பகுதியில் அவர் நடைபயணம் செய்தபோது பாலிவுட் நடிகை ரியாசென் உடன் சென்றார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ரியாசென் தமிழில் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த குட்லக் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். பின்னர் ஹிந்தியில் பல படங்களில் நடித்தார்.