வானமாமலை பெருமாள் கோயிலில் கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம்
ADDED : 1060 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது உதயநிதி ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. திருநெல்வேலி வந்த கீர்த்தி சுரேஷ், நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது அம்மாவும், மாஜி நடிகையுமான மேனகா சுரேஷ், பாட்டி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வந்த அவரை பக்தர்கள் பலரும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தனர்.