உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின்னர் காதலுக்கு மரியாதை படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷாலினி. அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என ஒரு மகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிவிட்டார் ஷாலினி. அவ்வபோது அஜித் , ஷாலினி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகும். தற்போது அப்படி சில படங்கள் வெளியாகி உள்ளன.

ஷாலினி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவியின் பிறந்தநாளை தனியார் ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அஜித். இவர்களுடன் அஜித்தின் குழந்தைகளும் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛துணிவு' படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !