பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் மரணம் : தற்கொலை என தகவல்
ADDED : 1060 days ago
பவர் ரேஞ்சர்ஸில் நடித்த பிரபல நடிகர் ஜேசன் டேவிட் பிராங்க்(49) காலமானார். இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தொடர் பவர்ரேஞ்சர்ஸ். இதில் கிரீன் பவர் ரேஞ்சராக நடித்து பிரபலமானவர் ஜேசன் டேவிட் பிராங்க். கிட்டத்தட்ட 100 எபிசோடுகளுக்கு மேல் இந்த தொடரில் நடித்துள்ளார். இதுதவிர ஹாலிவுட்டில் நிறைய படங்களிலும் நடித்துள்ளார். தற்காப்பு கலைகளில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜேசன் டேவிட் பிராங்க்கின் மரணம் அவரது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.