ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக இயக்க தயாராகும் சுதா
ADDED : 1069 days ago
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடிப்பில் இயக்கிய சூரரைபோற்று படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தேசிய அளவில் பல விருதுகளும் இந்த படத்துக்கு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தை தற்போது அவர் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். சூரரைபோற்று படத்தை ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு இயக்கிய சுதா, அடுத்த படத்தை மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு இயக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தையும் சூர்யா தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தில் நடிப்பதற்கு சூர்யா, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரின் பெயர்களையும் சுதா பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.