டிச., 10ல் ‛லத்தி' டிரைலர் ; 22ல் படம் ரிலீஸ்
ADDED : 1042 days ago
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி நான்கு மொழிகளில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைத்துள்ள இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடித்த போது இரண்டு முறை காயம் அடைந்தார் விஷால். மேலும் சுனைனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. அதோடு படம் டிசம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஷால்.