உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள நடிகர் கொச்சு பிரமேன் காலமானார்

மலையாள நடிகர் கொச்சு பிரமேன் காலமானார்

மலையாள சினிமாவின் குணசித்ர நடிகர் கொச்சு பிரமேன். மேடை நாடக நடிகராக இருந்த இவர் 1999ம் ஆண்டு வெளிவந்த தில்லிவாலா ராஜகுமார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 250க்கும் மேற்பட்ட படங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 68 வயதான கொச்சு பிரேமன் சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !