அரண்மனையில் பிரமாண்டமாய் நடந்த ஹன்சிகாவின் திருமணம்
ADDED : 1037 days ago
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. சமீபத்தில் தனது பிசினஸ் பார்ட்டனரான சோஹைல் கத்துரியா என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி பிரமாண்டமாய் நடந்தது.
ஹன்சிகா சிவப்பு நிற லெஹங்கா அணிந்து இருந்தார். சோஹைல் கத்துரியா கோல்டன் நிறத்திலான சர்வானி அணிந்திருந்தார். இந்த திருமணத்தில் மணமக்களின் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின் போது வான வேடிக்கை, ஆட்டம், பாட்டு கொண்டாட்டம் என பிரமாண்டமாய் இவர்களது திருமணம் நடந்தது. இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. ஹன்சிகாவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்தை பகிர்ந்துள்ளனர்.