மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1005 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1005 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1005 days ago
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் இந்த படத்தை நரப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். ஸ்ரீகாந்த் அத்தலா இயக்கியிருந்தார். தமிழைப் போலவே தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை இந்தப் படம் பெரும் என்கிற நம்பிக்கையில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்காக காத்திருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் தவிர்க்க முடியாத சூழலில் இந்தப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
அதனால் இந்த படத்திற்கான வரவேற்பை மிகப்பெரிய அளவில் பார்க்க முடியவில்லை என்கிற வருத்தம் வெங்கடேஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 13ம் தேதி இந்த படத்தை தியேட்டர்களில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை வெங்கடேஷின்ன் மருமகன் முறையிலான உறவினரான நடிகர் ராணா சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார்.
1005 days ago
1005 days ago
1005 days ago