கிரைம் த்ரில்லர் படத்தில் கிரிஷா க்ரூப்
ADDED : 1198 days ago
அழகுகுட்டி செல்லம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரிஷா க்ரூப். அதன்பிறகு கூட்டாளி, கோலிசோடா 2, சாலை, ஏஞ்சலினா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகாகவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை தேர்ட் ஐ சார்பில் எம்.வி.விஜய் தயாரிக்கிறார். தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். எம்.ஜி.ஆரின் சென்னை ராமவரம் தோட்டத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. கிரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் உள்பட பலர் நடிக்கின்றனர்.