மேலும் செய்திகள்
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா!
1027 days ago
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
1027 days ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
1027 days ago
முங்காரு மல என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நேகா ஷெட்டி. அதன்பிறகு தெலுங்கு பக்கம் வந்தர் மெஹபூபா, கல்லி ரவுடி, மோஸ்ட் எலிஜபிள் பேச்சுலர், டிஜே டில்லு படங்களில் நடித்தார். தற்போது அவர் கார்த்திகேயே கும்மகொண்ட ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது 'பெதுருலங்கா 2012' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
படத்தை கிளாக்ஸ் இயக்கியுள்ளார். லௌக்யா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ரவீந்திர பெனர்ஜி முப்பனேனி தயாரிக்கிறார். மணிசர்மாவின் இசை அமைக்கிறார். அஜய் கோஷ், சத்யா, ராஜ் குமார் காசிரெட்டி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ராம் பிரசாத், கோபராஜு ரமணா, எல்பி ஸ்ரீராம், சுரபி பிரபாவதி, கிட்டய்யா, அனிதாநாத், திவ்யா நர்னி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேகாவின் தோற்றத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். அவரது கேரக்டர் பெயர் சித்ரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் கிளாக்ஸ் கூறியதாவது: சித்ரா அப்பாவியாக தோன்றினாலும் அழகாக இருப்பதோடு, நடிப்பிலும் நம்மை கவர்கிறார். கதையானது நகைச்சுவை, மற்றும் த்ரில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. கிராமத்து பின்னணியில் உருவாகும் படம். கார்த்திகேயா, நேஹா ஷெட்டியின் கெமிஸ்ட்ரி திரையில் அழகாக இருக்கிறது. இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம். படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். என்றார்.
1027 days ago
1027 days ago
1027 days ago